விளையாட்டு

இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது – ஷகாரியார் கான்

இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் இந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.

இந்தியா எவ்வித பதிலும் தெரிவிக்காத நிலையில் இலங்கையில் தொடரை நடத்த பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.

இதற்கும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை, இந்நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பயணத்தால் ஒரு முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் இந்தியாவுடன் விளையாடவே விரும்பினோம். ஆனால் இந்தியா தரப்பில் எந்தவொரு நல்ல பதில் இல்லை. ஏற்கனவே தொடர் நடத்துவது கால தாமதம் ஆகிவிட்டது. இதற்கு மேல் தொடரை நடத்துவதற்கு நேரமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஒவ்வொருவராக அணியிலிருந்து விலகல் : கடும் பயிற்சியில் CSK

wpengine

டில்ஷானின் ஓய்வினைத் தொடர்ந்து ‘சின்னத்திரையின் குமரியான மஞ்ஜுலா’ 2வது பயணத்தை தொடரும் சாயல்.

wpengine

லக்‌ஷான் மற்றும் ஹஸரங்காவின் முயற்சியில் இலங்கை அணி வெற்றி கொண்டது..

wpengine