விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில் குறித்த பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம் செய்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக 18 மாத காலம் பணியாற்றி, சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கிண்ணத்துடன் அந்த பதவியில் இருந்து விடைபெற்ற முன்னாள் அணித்தலைவர் ரவிசாஸ்திரி விண்ணப்பித்து இருக்கிறார்.

மின்னஞ்சல் மூலம் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து இருப்பதாக ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே தெரிவுக் குழு தலைவர் சந்தீப் பட்டீலும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்.

54 வயதான ரவிசாஸ்திரி இந்திய அணிக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டியில் விளையாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அணியானது முதலில் களத்தடுப்பு….

wpengine

சர்ரே அணி சார்பில் 08வது சதத்தை பூர்த்தி செய்தார் சங்கா..

wpengine

சங்கா,சனத் மற்றும் மஹேலவினை பின்தள்ளி டில்ஷான் மற்றுமோர் சாதனை..

wpengine