உள்நாட்டு செய்திகள்

இந்திய பாதுகாப்பு செயலாளர் இன்று(08) ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்…

(FASTNEWS|COLOMBO) இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழுவினர் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(07) இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.

இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதுடன் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவுடன் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் இடம்பெறும் பாதுகாப்பு விவாதத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பாஸ்மதி அரிசி குறித்த பரிசோதனையின் பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணை..

wpengine

முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பு மனுத்தாக்கல் கையளிப்பு

wpengine

ரயிலில் மோதி இளம் தம்பதி மரணம்

Azeem Kilabdeen