உலக செய்திகள்விசேட செய்தி

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

இந்தோனேசியாவில், சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தோனேசிய நேரப்படி, அங்கு இரவு 10.30 மணியளவில், குறித்த இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக, குறித்த இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன்,.சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதுமில்லை.

இதற்கிடையே, இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி பகுதியில், ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகவும் பதிவாகியுள்ளது.

(rizmira)

Related posts

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக டின் யோவ் பதவிப் பிரமாணம்

wpengine

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து

wpengine

UPDATE – அமெரிக்க தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது விசாரணை..

wpengine