உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்…

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கிலோமீட்டர் தென்கிழக்கே கடல் படுகைக்கு அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டராகவும், பின்னர், சுமார் 25 நிமிடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் 6 ரிக்டராகவும் பதிவான தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தடுப்பு மருந்து – Oxford பரிசோதனை வெற்றி

wpengine

தொடர்ந்தும் இங்கிலாந்து ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரத்து

wpengine

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் வீட்டின் அருகே வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு…

wpengine