உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் இயற்கை பேரழிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு…

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு ஏற்பட்ட சுனாமி அலைகள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியது.

இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related posts

பிரிட்டிஷ் எயார் விமான சேவைகள் இரத்து

wpengine

ஜல்லிக்கட்டு குறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் உறுதி… [PHOTO]

wpengine

ஒலியின் வேகத்தை ஒத்த ரயில் சேவை – தென்கொரியா முன்னெடுக்கவுள்ள புரட்சிகரத் திட்டம்…

wpengine