Uncategorized

இந்த அரசில் சில அமைச்சர்களுக்கே மெய்பாதுகாவலர்கள் இல்லாத நிலையில் முன்னாள் M.P சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் ஏன்?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மெய்பாதுகாவலர்களின் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

NASA வின் பறக்கும் தட்டுடன் செவ்வாய் நோக்கிய பயணம்

wpengine

skypeஇன் அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பு

wpengine

இலக்கை தொலைத்த முஸ்லிம் கட்சிகளும்.. எடுப்பார் கைப்பிள்ளையான முஸ்லிம் தேசியமும்.. முன்னாள் அமைச்சர் எம். எச்.சேகு இஸ்ஸடீன்

wpengine