உலக செய்திகள்

இனி பாதையில் டீசல் கார்களுக்கு தடை

தலைநகர் டெல்லியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 27 ஆயிரம் கார்கள் டீசல் மூலமாக இயங்குகின்றன. இவற்றினால் பாதிப்பு ஏற்படுவதால், இந்த கார்களை கியாஸ் மூலமாக இயக்க வேண்டும் என்றும், டீசல் கார்களுக்கு மே 1ம் திகதி (அதாவது நேற்று) முதல் தடை விதிக்கப்படுவதாகவும் டெல்லி அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்தும், காலஅவகாசத்தை நீடிக்க வலியுறுத்தியும் கார் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடியானது.

இதனையடுத்து டெல்லியில் டீசல் கார்களுக்கான தடை நேற்று அமுலுக்கு வந்தது. பல இடங்களில் டீசல் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

சூடானில் குப்பைகள் போல் கொட்டப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்..!

wpengine

குவைட் நாடாளுமன்றம் கலைப்பு

wpengine

தமிழகத்தில் புதிதாக 198 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: இந்தியா முழுவதும் 3038 பேர் பாதிப்பு

News Editor