உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதிக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் அரசியல் முதிர்ச்சி இல்லை – ராவய பத்திரிகை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று காட்டமான ஆசிரியர் தலையங்கம் ஒன்றை (சிங்கள) ராவய பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அண்மையில் குறித்த தலையங்கத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஊடகங்கள் தன்னை அரசியல் ரீதியாக காணாமல் போகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சனம் ஒன்றை முன்வைத்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வுக்கு தனது புதல்வரை அழைத்துச் சென்றமை, ஜனாதிபதியின் பயன்பாட்டுக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்தமை போன்ற விடயங்கள் குறித்த ஊடகங்களின் விமர்சனத்துக்கான பதிலாக ஜனாதிபதியின் கருத்து வெளிப்பட்டிருந்தது.

எனினும் ஊடகங்கள் என்பது பொதுமக்களின் வரிப்பணத்தில், பொதுமக்களுக்காக நடத்தப்படுவதன்றி, அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக செயற்படுவதற்கான சாதனங்கள் அல்ல. அதனை ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊடகங்களின் செய்திகளில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, அவற்றை விமர்சிப்பது சிறந்த அரசியல்வாதிகளுக்கான பண்பு அல்ல. ஜனாதிபதி இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் அரசாங்கத்தின் மீதான ஊடக விமர்சனங்களை கட்டுப்படுத்த முயற்சித்தால் மஹிந்தவுக்கு நடந்தது போன்றே ஏனைய அரசியல்வாதிகளின் தலைவிதியும் அமையும் என்றும் ராவய பத்திரிகை மேலும் வலியுறுத்தியுள்ளது.

rawaya

 

Related posts

நாட்டை கட்டியெழுப்புவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வஜிர அபேவர்தன..!

wpengine

ஜம்இய்யா கூறியதாக உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்ட மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கண்டன அறிக்கை வெளியிட்ட ACJU

wpengine

Update – சர்ச்சைக்குரிய பிணைமுறி குறித்த விசேட அறிவிப்பு இன்று மாலை..

wpengine