உள்நாட்டு செய்திகள்

இன்புளூவன்சா H1N1 குறித்து அச்சமடைய தேவையில்லை – சுகாதார அமைச்சு…

இன்புளூவன்சா H1N1 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த நோய் குறித்து வீணாக அச்சமடைய தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் H1N1 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், மே முதல் ஜூலை மாதங்களிலும் அந்த நோய் பரவுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி நாட்டின் பல பிரதேசங்களில் H1N1 வைரஸ் சம்பந்தமாக மக்களை தௌிவூட்டுவதற்காக வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஜயசுந்தர பண்டாரவிற்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

(rizmira)

Related posts

அளுத்கம கலவரம் குறித்து மீள்பரிசீலனை

wpengine

எம்பிலிப்பிடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

wpengine

2022 இல் மாத்தளையில் 85 எயிட்ஸ் நோயாளிகள்

News Editor