Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்றும் கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவானது சுகாதார நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று(20) கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் வாக்களிப்பின் போது தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் சுயதனிமைப்படுத்தல் நிலையங்களின் வாக்களிப்பு ஒழுங்குகள் குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இந்நிலையில் நாட்டின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து அதற்கமைய தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான நடமாடும் வாக்காளர் நிலையங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்களை தேசப்பிரிய முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவனைக்குதவாத 69,525 Kg அரிசி முடக்கம்..

wpengine

நாட்டிற்கு வர ஆவலுடன் காத்திருக்கும் 39,000 இலங்கையர்கள்

wpengine

பாதிக்கப்பட்ட 12 இலட்சம் பேருக்கும் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டம் ஆரம்பம்

wpengine