உள்நாட்டு செய்திகள்

இன்றும்(29) நாளையும்(30) நாடு முழுவதும் பலமான காற்றுடன் கூடிய நிலைமை…

(FASTNEWS|COLOMBO) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ‘போனி’ 28ஆம் திகதி வட அகலாங்கு 8.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.9 E இற்கும் அருகில் மட்டக்களப்பிற்குக் கிழக்காக ஏறத்தாழ 580 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மே 1ஆம் திகதி வரை வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை விட்டு விலகி நகரக் கூடுவதுடன் அதன் பின் மீண்டும் படிப்படியாகத் திரும்பி வடகிழக்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் நாடு முழுவதும் பலமான காற்றுடன் கூடிய நிலைமை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென், மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

சந்தையில் விற்பனையாகும் கத்திரிக்காய்கள் குறித்து எச்சரிக்கை..!

wpengine

ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

Azeem Kilabdeen

ஜனாதிபதி கோட்டா பெண்களுக்கு பயமா? ஹிருணிகா நடு வீதியில் வைத்து கோஷம்!

wpengine