உள்நாட்டு செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு…

தம்புள்ளை, கொழும்பு பிரதான வீதியில் கலேவெல, யட்டிகல்பொத்த பகுதியில் இன்று(02) அதிகாலை, முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், பெண் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டில் மீண்டும் மின்தடை

wpengine

SLFP தலைவராக மீளவும் மைத்திரி

wpengine

இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine