உள்நாட்டு செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 பேர் மருத்துவமனையில்…

கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று, இன்று(25) அதிகாலை வவுனியா – பூனாவை பகுதியில் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தாக்குதல் சம்பவங்களில் 253 பேர் உயிரிழந்துள்ளனர்…

wpengine

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

wpengine

வடமேல் மாகாண வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு…

wpengine