உள்நாட்டு செய்திகள்

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களுக்கு கனமழை…

நாட்டின் மேற்கு , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களில் இன்று(30) ஓளரவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மின்னலினால் ஏற்படும் அனர்த்தத்திலிருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

(rizmira)

Related posts

பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு…

wpengine

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்ய சட்டமா அதிபரால் உத்தரவு

wpengine

சுதந்திர கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், பொதுஜன முன்னணியில் இணைவு..

wpengine