உள்நாட்டு செய்திகள்

இன்று மழையுடன் கூடிய காலநிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இவ்வறிக்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிக மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வனப்பகுதியில் 2 சடலங்கள் மீட்பு…

wpengine

எதிர்வரும் 26 ஆம் திகதி பணிபுறக்கணிப்பில்…

wpengine

இந்தியா செல்ல அனுமதி கோருகிறார் கம்மன்பில.

wpengine