Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் அமைதி காலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நேற்று(02) நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

அதன்படி, தேர்தல் இடம்பெறும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பிரசாரக் கூட்டங்களை நடத்துவதும், வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும், பதாதைகளைக் காட்சிப்படுத்துவதும், சுவரொட்டிகளை ஒட்டுவது, சகல ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேபோல், எவ்வித சந்தேகமும் அச்சமும் இன்றி ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

wpengine

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

பொன்சேகா’வின் நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நாளை மறுதினம்.

wpengine