உள்நாட்டு செய்திகள்

இன்று 18 மணித்தியால நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தை கூட்டு நீர் வழங்கல் திட்டத்தில் அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு அமலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைச்சு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பேருவளை, அளுத்கம, தர்கா டவுன், பெந்தர, களுவாமோதர, பிலிமானவத்தே, பம்புவால, பயகல மற்றும் மாகோனா ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

மூன்று மாவட்டங்களுக்கு முன்னுரிமை

wpengine

பாலியல் லஞ்சம் – சட்டமா அதிபரின் உதவியை நாடும் குற்ற புலனாய்வு பிரிவு

wpengine

1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு…

wpengine