உள்நாட்டு செய்திகள்

இன்று 8 மணி நேர நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (10) கொழும்பு நகரை சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று(10) இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, 13 ,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 01 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..

wpengine

டயானா’வுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

உலகக் கிண்ண ஒளிபரப்பு உரிமம் ரூபவாஹினிக்கு

wpengine