உள்நாட்டு செய்திகள்

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள்

(FASTNEWS| COLOMBO) – இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதோடு, அதற்கான நேர்முகப்பரீட்சை தற்போது இடம்பெறுவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஏனைய வருடங்களிலும் பார்க்க மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தக் கல்லூரிகளில் 4200 பேர் பயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லக்கல – ரணமுரே’க்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

ரதன தேரர் FCID இற்கு

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்த யோசனை நாடாளுமன்றில்..

wpengine