Coronavirus Outbreakஉலக செய்திகள்

இயல்புநிலைக்கு திரும்பிய நியூசிலாந்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்படும் நியூசிலாந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

மதுபான விடுதிகளை தவிர்த்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடித்திருத்தகங்கள், உணவகங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

10 பேர் வரை ஒன்றாக சேர்ந்து சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக அங்கு எந்த புதிய தொற்று பாதிப்பும் உறுதிசெய்யப்படவில்லை.

இதேவேளை, நியூசிலாந்தில் இதுவரை 1,497 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு…

wpengine

இந்தியாவில் மேலும் 19 பேருக்கு புதிய கொரோனா

wpengine

நரேந்திர மோடியின் திருகுதாளங்களை அம்பலமாக்கிய ஜாஹீர் நாயக்..!

wpengine