உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இரட்டைக் கொலை பிரதான சூத்திரதாரி சுட்டுக்கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அண்மையில் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான உதவியளார் எனவும், அவர் பல்வேறு குற்ற செயல்களுக்கு தொடர்புடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.

சந்தேகநபரை கைது செய்யச் சென்றபோது, ​​அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதுடன், பொலிஸார் மோட்டார் சைக்கிளை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.

பின்னர், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதிய நிலையில் பதிலுக்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 40 வயதுடைய இஹல வித்தானகே ஜோஸப் என்பவர் என தெரியவந்துள்ளது.

Related posts

அமைச்சரவையில் திடீர் திருப்புமுனை – ஜனாதிபதி உறுதி..

wpengine

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

இன்று(20) முன்னெடுக்க இருந்த ரயில் வேலைநிறுத்தப் போரட்டம் கைவிடப்பட்டது..

wpengine