உலக செய்திகள்

இரட்டை அடுக்கு பேரூந்து தீப்பிடித்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து புறப்பட்டு சென்ற இரட்டை அடுக்கு பேரூந்து தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேரூந்தின் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்து சில நொடிகளுக்குள் பேரூந்தின் இருக்கைகள் வழியாக மளமளவென்று பரவிய தீயில் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதற்குள் பயங்கர சப்தத்துடன் பேரூந்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், காயங்களுடன் பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு

wpengine

ஈராக்கில் ஐ.எஸ் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 35 பேர் பலி

wpengine

சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது- ஜீ ஜின்பிங்

wpengine