உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று(06) ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) தரம் 06 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு, இரண்டாம் தவணைக்காக இன்று(06) பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்றன.

எவ்வாறாயினும், தரம் ஒன்று முதல் தரம் 05 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதியே பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நேற்று(05) பாடசாலைகளை சுற்றியுள்ள, சுற்றுபுறத்தில் விசேட தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள எந்த ஒரு பாடசாலைகளுக்கு அருகிலும் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளுக்கு வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக தனியான வாகன தரிப்பிடங்கள் மற்றும் மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதகாவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசியல் நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் கோரிக்கை விடுப்பு…

wpengine

பால்மா வகைகளின் விலைகளை மேலும் குறைக்க நிறுவனங்கள் இணக்கம்

News Editor

மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை…

wpengine