Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இரவோடு இரவாக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கடிதம் நேற்று (05) இரவு தமக்கு கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், எம்.பி. ஜயசேகரவிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட முடியாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகரவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கி கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கான கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

பாடப்புத்தகங்களுக்கும் வவுச்சர் முறைமை…

wpengine

அனர்த்தங்கள் தொடர்பில் உடன் அறிவிக்கவும்..

wpengine

சாதாரண தர பரீட்சைக்கும் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

wpengine