உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் சுஜீவ ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகல்…?

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறத் தயாராக இருப்பதாக, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சாதாரண அலுவலகப் பணியாளருக்கு உள்ள அதிகாரம் கூட தனக்கு இல்லை என்றும், கட்சித் தலைவரின் செயற்பாடு காரணமாக தமக்கு அரசியல் வாழ்க்கையில் வெறுப்புணர்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவயில், நேற்று(14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தமது நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசியலிருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மேற்கொள்ளவும் பின்னிற்கப் போவதில்லை எனவும் தமது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தாலும் சாதாரண அலுவலகப் பணியாளருக்கு உள்ள அதிகாரம் கூட தமக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹவுக்கும் இடையில் அண்மையில் மிககுறுகிய நேர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவசர கூட்டம்…

wpengine

கோத்தபாய உள்ளிட்ட 08 பேருக்கும் பிணை, வெளிநாடு செல்லவும் தடை. (Update)

wpengine

அணிக்கு மேத்யூஸ் தலைவராக இருக்கும் வரை எனக்கு அணியில் இடமில்லை – போட்டுடைத்த தில்ஹார

wpengine