Top Story 3உள்நாட்டு செய்திகள்

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

55வது தலைமை அதிகாரியாக நேற்றைய தினம் அவர் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதுவரை இந்தப் பொறுப்பை வகித்த மேஜர் ஜெனரல் சத்தியகீர்த்தி லியனகே ஓய்வு பெற்றதையடுத்தே மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன குறித்த பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் பதவியேற்ற பின்னர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வாவை சந்தித்திருந்தார்.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன முன்னர் இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியாக கடமையாற்றியடையும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் – www.Army.lk

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வௌிநாட்டவர்கள் இருவரின் கைவரிசை..

wpengine

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி

wpengine

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு..!

wpengine