உள்நாட்டு செய்திகள்

இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் படுகாயம்…

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் இன்று (31) இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்றும் முருதொலவ பகுதியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமாக பேரூந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மஹவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மாட்டிறைச்சி கடைகளுக்கு இன்று முதல் தடை

wpengine

திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து ஆளுநர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – இம்ரான் எம்.பி..!

wpengine

ஶ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு…

wpengine