Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடை வழங்கியுள்ளது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த குறித்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும், இலங்கை மக்களின் தேவைகளுக்கும் உதவியளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சுமார் 3000 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கவும் அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

Related posts

இன்று முதல் பேலியகொடை மீன் சந்தை திறப்பு

wpengine

எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

News Editor

ஐந்து நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமிப்பு

wpengine