உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடை வழங்கிய சவூதி அரேபியா..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இவை முஸ்லிம் சமய திணைக்களம் புனித நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். சவுதி அரேபியாவின் இலங்கைக்கான துாதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி பௌத்த சாசன மற்றும் மத கலாச்சார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் சைனுல் ஆப்தீன் முகம்மது பைசல் ஆகியோரிடம் முஸ்லிம் சமய திணைக்களத்தின் வைத்து கையளித்தார்.

இந்த விழாவில் சவுதி அரேபியாவின் புதிய தூதுவராக செல்ல உள்ள அமீர் அஜ்வாத் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

 

 

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பதற்ற நிலை [PHOTOS]

wpengine

இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்புக்கு பின்னால் இந்தியா உள்ளதா?

wpengine

தபால் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம்

wpengine