ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுசூடான செய்திகள்

இலங்கையில் நடந்த தாக்குதல்கள்; முஸ்லிம்களுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த இம்ரான் கான் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விசேட கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொது சபையில் மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு இஸ்லாம் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபடுத்தப்பட்டது.காரணம் அதில் ஈடுபட்டவர்கள் தற்கொலை தாக்குதலில் ஈடுப்பட்டனர்.

தற்கொலை தாக்குதல் நடத்தினால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று இஸ்லாமியர்கள் கருவதாக கூறினர்.

சிலர் பெண் தற்கொலை குண்டுதாரிகள் பற்றி கேள்வி எழுப்பினர். பின்னர் தான் புரிந்து கொள்ள முடியாதது நடந்தது. இஸ்லாமும் தற்கொலை குண்டு தாக்குலும் ஒன்று என கூறினர்கள்.

இதற்கு முன்னர் உலகின் பெருபாலான தற்கொலை குண்டு தாக்குதல்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகளால்தான் நடத்தப்பட்டது. இதை யாரும் ஆராய வில்லை.

அவர்கள் இந்துக்கள் ஆனால் இந்துக்களை யாரும் குற்றம் சட்டவில்லை. அதுவும் சரிதான். அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்துகள் என்ன செய்வார்கள்.

நாங்கள் மிதவாதிகள் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது?.

Related posts

நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

wpengine

ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் உயர்தரப் பரீட்சை பெறுபேறு என்ன? [RESULT ATTACHED]

wpengine

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க திருடர் கூட்டம் முயற்சி

wpengine