உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரகம் இலங்கை அணி குறித்து அதிருப்தியில்..

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரகம் ஃபோர்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளது.
தம்மிக்க பிரசாத் மற்றும் துஸ்மந்த சாமர ஆகியோர் காயம் காரணமாக தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சமிந்த எரங்க, பந்துகளை சட்டவிரோதமாக வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதற்காக சோதனைக்கு உள்ளாகவுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் வேகப்பந்து வீச்சை பலப்படுத்த வேண்டி இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பந்துவீச்சாளர் சமிந்த பண்டாரவை இந்த தொடரில் இணைத்துக் கொள்வது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து இராஜினாமா

wpengine

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் வெளியீடு..

wpengine

ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களுக்கான கட்சி

wpengine