உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியில் கொரோனா கொத்தணி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு குறித்த மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் சகலதுறை ஆட்ட வீரர் இசுறு உதான மற்றும் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஸிரான் பெர்ணான்டோ ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸிற்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் மூவரும் இன்று மீண்டும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வைபர் தடையினை நீக்கினாலும் பேஸ்புக், வட்ஸ்அப் தடையினை நீக்காதற்கான காரணம் இதுதான்…

wpengine

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று(18)

wpengine

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

wpengine