உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களுடன் சுருண்டது…

இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று ஆரம்பமாகியது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 59.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ராஜித 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளது.

அதனடிப்படையில் தென்ஆப்பிரிக்கா அணி 44 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் ஸ்டைன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார்.

Related posts

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு இடைக்காலத் தடை…

wpengine

கோப் குழு இன்று கூடுகிறது

wpengine

ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது – விமல் வீரவன்ச

wpengine