உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட்டில் நேற்றைய நாள் இலங்கை அணிக்கு நடந்தது இது தான்..

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நேற்றைய நாள் இறுதி வரை துடுப்பெடுத்தாடிய தனஞ்ஜய டி சில்வா 116 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 64 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றனர்.

இவர்கள் இருவம் பெற்ற இணைப்பு ஆட்ட ஓட்டங்களின் எண்ணிக்கை 189 ஆகும். இது இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியொன்றில் 6 ஆவது விக்கெட் இணைப்பு ஆட்டமாக பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாக கொள்ளப்படுகின்றது.

இதற்கு முன்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் அஞ்ஜலோ மெத்திவ்ஸ் ஆகியோர் இணைந்து 6 ஆவது விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். இது நேற்று வரை 6 ஆவது விக்கெட்டுக்காக இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்றுக் கொண்ட அதிகூடடிய ஆட்டமாக கொள்ளப்பட்டது.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்றாகும். இன்றைய போட்டியில் நேற்றைய இணைப்பு ஆட்டம் தொடரப் போகின்றமை ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்ற ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=CDgZkdKjIpA” width=”560″ height=”315″]

 

ccc

Related posts

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

wpengine

மக்கோன எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் 25 லீற். பெற்றோலுடன் கைது

News Editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 707

wpengine