உள்நாட்டு செய்திகள்

இலங்கை – இந்தியாவுக்குமிடையில் சமூக அபிவிருத்திக்கான தகவல் தொழில்நுட்ப உடன்படிக்கை கைச்சாத்து…

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சமூக அபிவிருத்திக்கான தகவல் தொழில்நுட்ப உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம்செய்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இதன் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(15) இடம்பெற்றுள்ளது. இலங்கையில் சமகால அரசாங்கத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்திய அமைச்சர் பாராட்டிப் பேசியுள்ளார்.

சமூக அபிவிருத்திக்காக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. இருதரப்பு தகவல் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Related posts

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றும் திட்டம் தோல்வி..!

wpengine

பேருந்து கட்டணம் 25% இனால் அதிகரிப்பு

wpengine

நாட்டின் எப்பகுதியிலும் கொவிட் தொற்றாளர்கள் இருக்கக்கூடும்

wpengine