ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினை சட்ட முறைகளில் மாற்றம்… புதிய சட்டமூலம் விரைவில்…

கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் ஆட்ட நிர்ணயம் என்பவற்றுக்கு பாரிய தண்டனை வழங்குவதற்குத் தேவையான சட்டமூலம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தனியார் நிறுவனம் போன்றே கருதப்படுகின்றது. அதில் விளையாடும் வீரர்கள் அரச உத்தியோகத்தர்களாக கருதப்படுவதும் இல்லை. இதனால், கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறும் பண முறைகேடுகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை செய்ய முடியாதுள்ளது.

இதனாலேயே, குறித்த இந்த திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மைத்திரியை காட்டிக் கொடுத்த மர்ம நபர் சிக்கினார்!

wpengine

ரவியிடம் 300 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் பந்துல..!

wpengine

உலகிலேயே அதிகளவு பாலியல் தொழில் புரியும், அரசு அங்கீகரித்த ஒரே இஸ்லாமிய நாடு…

wpengine