உள்நாட்டு செய்திகள்

இலங்கை சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு…

சிறுவர் உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு, இலங்கையில் சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் ஜெனீவாவில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 சுயாதீன நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களைக் கொண்டதாக இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தை எந்த வகையில் நாடுகள் அமுலாக்கியுள்ளன என்ற அடிப்படையில், இந்த ஆய்வு இடம்பெறும். இதன்போது இலங்கையின் பிரதிநிதிகளிடம், சிறுவர் உரிமைகளின் நிலைமைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளும் எழுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் தலைமையில் ‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ வேலைத்திட்டம்…

wpengine

பசில் ராஜபக்ஷவுடன் கைகோர்க்கிறது ‘ஜனதா சேவக பக்சய’…

wpengine

நாணயற் சுழற்சியில் இந்திய அணி வெற்றி..

wpengine