உள்நாட்டு செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் இன்று(29), பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

தெமடகொட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தினுள் நேற்று(28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்து இவ்வாறு பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

மேலும் 184 கொரோனா தொற்றாளர்கள்

wpengine

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

wpengine

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பிலான அறிவித்தல்

wpengine