உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு பாரிய நட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக கூறியுள்ளார்.

இதேவேளை, அனர்த்த நிலைமைகளினால் பணியாளர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் சப்ரகமுவ பகுதிகளிலேயே இவ்வாறான நிலை அதிகம் காணப்படுவதாகவும் பிரதி முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

டெனீஸ்வரன் தொடர்பில் தீர்மானிக்க ரெலோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று..

wpengine

4வது முறையாகவும் இன்று பிரதமப் பதவியேற்றார் ரணில் (Update)

wpengine

பரீட்சை முறைகேடுகள் குறித்து முறையிட புதிய மின்னஞ்சல் முகவரி.

wpengine