உள்நாட்டு செய்திகள்

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவருக்கு GMOA எதிர்ப்பு..

இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்னவை நியமித்தமை தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மருத்துவ சபைக்கு தலைவர் ஒருவர் இல்லாத காலப்பகுதியினுள் அதன் தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டமை தொடர்பான தகவல் கிடைக்கப் பெற்றமையை தொடர்ந்து சைட்டம் எதிர்ப்பு தொழிற்சங்கமும் அதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டது.

குறித்த இந்த நியமனம் தொடர்பில் தமது சங்கத்தின் மத்திய செயற்குழு, இன்று(03) கூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக மருத்துவ சங்கத்தின் ஊடக பேச்சாளர் மருத்துவர் ஆனந்த அளுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

wpengine

ஐ.நா மனித உரிமைகள் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்…

wpengine

பசில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

wpengine