உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மின்சாரசபையின் பாவனையாளர்களுக்கு இலவசமாக LED மின் குமிழ்கள்…

இலங்கை மின்சாரசபையின் பாவனையாளர்களுக்கு இலவசமாக LED மின் குமிழ்களை வழங்க உள்ளது.

60 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை மாதாந்தம் பயன்படுத்துவோருக்கு இவ்வாறு LED மின்குமிழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும், இவ்வாறு வழங்கப்படும் மின் குமிழ்களுக்காக பாவனையாளர்களிடமிருந்து மாதாந்த கட்டணத்தின் ஊடாக எவ்வித பண அறவீடும் செய்யப்படாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மின்குமிழ்களை பயன்படுத்துவதனால் மாதாந்தம் சேமிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு மின்குமிழ்களுக்கான செலவு ஈடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையினால் வழங்கப்பட உள்ள LED மின் குமிழ்களுக்கு மூன்றாண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படவுள்ளதோடு, வறட்சியான காலநிலையின் போதும் மின்சாரத்தை தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related posts

கந்தளாய் பகுதியில் குழுக்களுக்கு இடையிலான கைகலப்பில் பதற்றம் நிலை…

wpengine

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது – கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்

wpengine

பெரியநீலாவனையில் பாதசாரி மீது மோதிய கார்

Azeem Kilabdeen