உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை – ரஷ்யா ஜனாதிபதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று…

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(23) அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார்.

இலங்கை – ரஷ்ய இராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் குறித்த இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று(23) நடைபெறும் இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது, பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1974ம்ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர், இலங்கையின் அரசத் தலைவர் ஒருவர் முதன் முறையாக அங்கு சென்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

(rizmira)

Related posts

கண்காணிப்பு நடவடிக்கைக்கு 14 பொலிஸ் குழுக்கள்

wpengine

பொதுத் தேர்தலினை முன்னிட்டு ஜேவிபி கட்சியின் சின்னத்தில் மாற்றம்..

wpengine

ஈஸ்டர் தாக்குதலின் பின் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கடலில் அழிப்பு – 1000 வாள்களும் அடக்கம்..!

wpengine