உள்நாட்டு செய்திகள்

இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது…

கண்டி குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கல்லூரியின் பணிப்பாளர் அமல் அருணப்பிரிய குறிப்பிட்டார்.

இக் கல்லூரியில் 11 பேருக்கு காய்ச்சல் பரவியதாக கல்லூரியின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஏனைய மாணவர்களுக்கு பரவக்கூடும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியமைக்கமைய கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாலியல் தொழில் சட்டத்திற்கு முரணானது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

wpengine

மாணவி மீது தாக்குதல் – 3 பேரும் விளக்கமறியலில்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம்

wpengine