உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பாடுகள் தடைபட்டுள்ளது – பிரதமர்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நிகழ்கால போக்கு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கடந்த ஆட்சியின் போது குறித்த ஆணைக்குழுவிற்காக நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் முறையற்ற செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பிலேயே அவர் இவற்றினை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மேலும், குறித்த அதிகாரிகளின் பிழையான நிர்வாக கட்டமைப்பினால் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் யாவும் தடைப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளையாவது எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

(riz)

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்

wpengine

“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – ரிஷாட்

wpengine

ஹென்ரிக் இசை நிகழ்ச்சி குறித்து முஸம்மில் விளாசல்

wpengine