உள்நாட்டு செய்திகள்

இ.போ.சபை மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் மட்டு…

(FASTNEWS|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, இன்று(08) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கை ​போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று(08) முதல் இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பேரூந்து மற்றும் புகையிரத சேவைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எல் பீ ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

இதனபடி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக 1000 ற்கும் அதிகமான பேரூந்துகளும் 20 புகையிரதங்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(08) முதல் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக ஒன்றிணைந்த நடவடிக்கை பிரிவொன்றை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு…

wpengine

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்

wpengine

மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுப்பது தமது கையில் இருக்கவில்லை – மைத்ரி

wpengine