உள்நாட்டு செய்திகள்

உணவு விஷமடைந்ததால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்…

மாத்தறை பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 20 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இவர்கள் இவ்வாறு தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவர்களில் 15 மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உணவு விஷமடைந்தமையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சம்பிக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்

wpengine

பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவர் பதவி…

wpengine

அமைச்சர் கிரியெல்ல ஊடகவியலாளர் ஒருவரை இழிவாய் திட்டியமை கேவலமான நடத்தையாகும் (VIDEO)

wpengine