உள்நாட்டு செய்திகள்

உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முன்னெடுக்கப்படும் என தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 09 ஆம் திகதியும் உத்தியோகபூர்வ வாக்குச் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏதேனும் காரணங்களின் நிமித்தம் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் வாக்களிப்பு தினமான 17 ஆம் திகதி மாலை 04 மணி வரை தங்களின் பிரதேசத்திற்கு பொறுப்பான தபால் அலுவலகத்தில் தமது வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அதிவேக வீதி ஊடாக 30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானம்…

wpengine

20ம் திருத்தச் சட்டமூலம பாராளுமன்ற விவாதம் இன்று..

wpengine

மொரகஹந்தை நீர்த்தேக்கத்திட்டம் இன்று மக்களிடம் கையளிப்பு…

wpengine