உள்நாட்டு செய்திகள்

உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் நாளை(24) முதல் இணையத்தளத்தினூடாக

(FASTNEWS|COLOMBO) – 2019ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள், நாளை(24) முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அனுமதி அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் குறித்த இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டை கட்டியெழுப்ப சகல முஸ்லிம்களையும் ஒன்றிணையுமாறு மீளாத் வாழ்த்துச் செய்தியில் ஜானாதிபதி அழைப்பு..!

wpengine

உடுவே தம்மாலோக்க தேரரை அச்சுறுத்திய நபர் கைது..

wpengine

சிறுவர் மீதான வன்முறை முறைப்பாடுகள் அதிகரிப்பு

wpengine