உள்நாட்டு செய்திகள்

உருளைக் கிழங்கு விதைகளுக்கு 50% மானியம்…

பருவமற்ற காலத்தில் உருளைக் கிழங்கு விதைகளுக்கு 50% மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக, விவசாய மற்றும் வர்த்தகத்துறை அமைச்சுகள் இணைந்து கலந்துரையாடி, விஷேட வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும், அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு, மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மற்றும் செயற்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் தொடர்பாக நேற்று(31) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

wpengine

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின

wpengine